புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி அவர் உள்பட 60 விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். சான்றிதழும், பதக்கமும் வழங்கி தெண்டுல்கரை கவுரவித்தது.
இந்த பாராட்டு குறித்து தெண்டுல்கர் கூறும்போது, உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழாவில் என்னை கவுரவித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் மிகுந்த பெருமையையும் அளிக்கிறது என்றார். கின்னஸ் சாதனை அமைப்பின் தலைமை நிர்வாகி கிரேக் கூறும்போது, தெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இதன் காரணமாக எங்களது ஆண்டு விழாவில் அவரை அங்கீகரித்து கவுரவித்தோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி