ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், ரோஜர்சும் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வருண் ஆரோன், ஷமி பந்தை விளாசினார். இஷாந்த் சர்மா தொடக்க ஜோடியை பிரித்தார். தனது 2–வது ஓவரில் அவர் ரோஜர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 9 ரன்களே எடுத்தார். அப்போது ஸ்கோர் 50ஆக இருந்தது. அடுத்து வாட்சன் களம் வந்தார். இஷாந்த்சர்மா பவுன்சர்களாக வீசி அவரை அச்சுறுத்தினார். அதே நேரத்தில் மறுமுனையில் இருந்த வார்னரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
வாட்சன் 14 ரன்னில் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 88ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு வார்னருடன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 77 ரன்னிலும், கிளார்க் 9 ரன்னிலும் இருந்தனர்.மதிய உணவு இடை வேளைக்கு பிறகு வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 33–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 10–வது செஞ்சூரி ஆகும். இந்தியாவுக்கு எதிராக 2–வது சதத்தை பதிவு செய்தார்.இதேபோல் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 69 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி