சென்னை:-டிசம்பர் 12ம் தேதி நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியை திரையில் காண ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் படத்தின் மீது போட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மீண்டும் லிங்காவிற்கு வேறு பிரச்சனை ஒன்று வந்துள்ளது. தற்போது சென்னையைச் சேர்ந்த பி.சக்திவேல், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் லிங்கா என்னுடைய கதை என்று தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், எழுத்தாளர் பொன்குமரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்தால் தான் படம் திரைக்கும் வரும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி