திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார். இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர். இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் திருமணம் நின்று போனது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர். ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு (கொழுந்தன்) அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி