சென்னை:-திரையுலகில் நுழைந்து 22 வருடங்களைக் கடந்திருக்கும் நடிகர் விஜய், இதுவரை 57 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள்.
மேலும் இப்படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக சொன்னாலும் அந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விஜய் 58 படத்துக்கு ‘கருடா’ என்று தலைப்பு சூட்டப்பட்டடிருப்பதாகவும், ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி