கொல்கத்தா அணி, கடந்த 2011-ம் ஆண்டு 1.1 மில்லியன் டாலருக்கு காலிசை ஏலத்தில் எடுத்தது. பின்னர், மறு ஏலத்தில் 9,16,000 டாலருக்கு மீண்டும் ஏலம் எடுத்தது. 2011-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் காலிஸ். அந்த சீசனில் அதிகம் ரன் அடித்தவர் அவர்தான். 2012-ம் ஆண்டு கொல்கத்தா அணி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் 16 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே களம் இறக்கப்பட்டார்.
அதில் ஒரு அரை சதத்துடன் 151 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், அவரை களம் இறக்க கொல்கத்தா அணி விரும்பவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை விடுவிக்க மனமில்லாமல், அணியின் வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது கொல்கத்தா அணி.
39 வயதாகும் தென்ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான காலிஸ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி