தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த போராட்ட குழுவை பின்னுக்கு தள்ளிவிட்டு மொத்த வாக்குகளில் 12.8 சதவீத வாக்குகள் பெற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். பெர்கூசன் போராட்ட குழு 10.1 சதவீத வாக்குகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடி வரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஜோசுவா வோங் 7.5 சதவீத வாக்குகளுடன் 3–வது இடத்திலும், பாகிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் 5.2 சதவீத வாக்குகளுடன் 4–வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு 4.5 சதவீத வாக்குகளுடன் 5–வது இடத்தில் உள்ளது. ரஷிய அதிபர் புதின் 4.1 சதவீத வாக்குகளுடன் 6–வது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2.3 சதவீத வாக்குகளுடன் 11–வது இடத்திலும் உள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு நாளையுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்பதை டைம்ஸ் பத்திரிகை 10–ந் தேதி தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி