அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…

மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…

மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!… post thumbnail image
வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற 6 மாதத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் அரசுப் பணிகள் துரிதமாக செயல்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது விரைவான செயல்பாடுகள் உலக நாடுகளை கவர்ந்துள்ளது. மோடியின் செயல்பாடுகள் உலக தலைவர்களை உற்றுநோக்க வைத்துள்ளது.

குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோடி வெகுவாக கவர்ந்துள்ளார். இதனால்தான் ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமா சம்மதித்துள்ளார். குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த மாதம் மியான்மர் நாட்டில் பிரதமர் மோடியை அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அவரது நடவடிக்கைகளை நேரிலேயே ‘மேன் ஆப் ஆக்ஷன்’ என்று புகழ்ந்தார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய பிறகுதான் குடியரசு தின விழாவில் பங்கேற்ற சம்மதித்தார். இப்போது பிரதமர் மோடியை ஒபாமா மீண்டும் பாராட்டி இருக்கிறார். வாஷிங்டன் நகரில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஒபாமா பேசுகையில் பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டு கூறியதாவது:–

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நீண்ட கால திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். அவரால் எப்படி இந்த சாதனையை குறுகிய காலத்தில் செய்ய முடிகிறது என்பதை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவரது அதிகாரத்துவ நிலைமை பாராட்டுக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். நீண்ட கால திட்டங்களை குறுகிய காலத்தில் எப்படி செயல்படுத்துகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒபாமா பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி