அதன் பின்னர் சிறுமி ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து ஷாலினியின் தாயார் சிறுமியிடம் பள்ளியில் என்ன நடந்தது என விசாரித்தார். அப்போது, பள்ளியில் உள்ள நாகராஜ் அண்ணா பிரேயர் முடிந்தவுடன் சாக்லேட் தருவதாக பக்கத்தில் உள்ள காலி அறைக்கு அழைத்து சென்று அசிங்கமாக நடந்து கொண்டார் என சிறுமி கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஷாலினியின் தாயார், உடனே அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள் என தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுமி ஷாலினியின் பெற்றோர் கடந்த 29ம் தேதி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமி படித்து வரும் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி