மேலும், இதுவரை தனது படங்களில் பிரபலமில்லாத நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர், இப்போது முதன்முறையாக முன்னணி ஹீரோயின் நயன்தாராவுடன் இணைந்திருக்கிறார். அந்த வகையில், விஜய்சேதுபதி-நயன்தாரா இணைந்து நடித்து வரும் நானும் ரெளடிதான் படப்பிடிப்பு கடந்த மாதமே நடைபெற இருந்தது. ஆனால், விஜயசேதுபதி வேறு படங்களில பிசியாக இருந்ததால், நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறர்கள்.
முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் படப்பிடிப்பு, 7ம் தேதிக்கு பிறகு பாண்டிச்சேரியில் நடக்கிறதாம். அப்போது, விஜய்சேதுபதி – நயன்தாரா சம்ந்தப்பட்ட வசன காட்சிகள் அங்குள்ள கடற்கரை ஏரியாவில் படமாக்கப்படுகிறதாம். அதைத் தொடர்ந்து வில்லன் கோஷ்டியுடன் விஜயசேதுபதி மோதும் ஆக்சன் காட்சிகளும் படமாகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி