அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியிருக்கின்றன. அதனால் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் தனுசுக்கு பாட வாய்ப்பளித்து வருகிறார்கள். இதுபற்றி தனுஷ் கூறும்போது, இந்த சினிமாவில் எஸ்.பி.பி போன்ற முன்னணி பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் இப்போது என் போன்றோரும் பாடுகிறோம். ஆனால் எனது குரல் கேட்பது போல் இருப்பதற்கு காரணம் டெக்னாலஜிதான்.
குரலில் இருக்கிற குறைகளை மாற்றி, வித்தியாசமான அவுட்புட் கொடுக்கிறார்கள். அதனால்தான், நான் பாடும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உளளது. அந்த வகையில், பிரபலமான இசைக்கலைஞர்கள் இருந்த இந்த சினிமாவில் நானும் ஒரு பாடகராக வலம் வருகிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி