அதனால் ‘ஐ’ படத்தை பொங்கலன்னு வெளியிடக் கூடாதென்றும், ஜனவரி மாதக் கடைசியிலோ, அல்லது பிப்ரவரி மாதத்திலோதான் வெளியிட வேண்டும் என்று சொல்லி வருகிறார்களாம். ஐ படம் வெளியானால் அவர்களது படங்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்களாம். அதனால் ஐ படம் தெலுங்கில் திட்டமிட்டபடி வெளியிட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். மேற்சொன்ன இரண்டு தெலுங்குப் படங்களையும் தயாரிப்பது மிகப் பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் நினைப்பது நடந்து விடும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாத நமது தயாரிப்பாளர்கள் தமிழ்ப் படங்களை தமிழ்நாட்டில் எடுப்பதை விட்டுவிட்டு, இன்னமும் தொடர்ந்து ஐதராபாத்திலேயே அதிகமாகப் படமாக்கி வருகிறார்கள் என இங்குள்ளவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
லிங்கா உட்பட பல படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் உள்ள பல ஸ்டுடியோக்களில் தெலுங்குப் படங்களை விட தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புக்கள்தான் அதிகம் நடைபெற்று வருகிறது. அதனால் தமிழ்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு பணிபுரிய அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் இங்குள்ள தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது, நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி