மேலும் மாநிலத்தில் நோய் பாதிப்பு அதிகமாக இருந்த ஆலப்புழா, கோட்டயம், குட்டநாடு பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட லட்சக்கணக்கான வாத்துகள் எரித்து அழிக்கப்பட்டன. மேலும் அங்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.மனிதர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நோய் கட்டுக்குள் வந்தது. மேலும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவவில்லை என பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். அதன்படி கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்த ஆலப்புழா, குட்டநாடு, கோட்டயம் மாவட்டங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு வாத்து உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு தான் வாத்து குஞ்சுகள் உற்பத்தியை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை வரை இந்த பகுதியில் சுமார் 1 லட்சம் வாத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. குட்டநாடு பகுதியில் வாத்து பண்ணைகளும் அதில் பணி புரிவோருமே அதிகமாக வசிக்கிறார்கள். அவர்கள் இந்த நடவடிக்கை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி