இது தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் மேற்படி அழகு நிலையம் அமைந்திருக்கும் கட்டிடம் பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து, பிடிபட்டவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தின் உரிமையாளர் என்ற வகையில் பிரியங்கா சோப்ரா மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா சோப்ரா, இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உங்களுக்கு நிறைய சொத்துகள் இருந்து, அவற்றை யாருக்காவது வாடகைக்கு விட்ட பிறகு, அங்கு குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் என்ன செய்கிறார்கள்? என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?…அதேபோல், நான் வாடைக்கு விட்ட கட்டிடத்தில் இருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது எனக்கும் தெரியாது. அந்த கட்டிடத்தை காலி செய்யும்படி நான் ஏற்கனவே அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். தற்போது போலீசார் இது பற்றி விசாரித்து வருகின்றனர். எல்லாவற்றையும் எனது வக்கீல்கள் கவனித்து வருவதால் இது தொடர்பான மேல்விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி