லண்டன்:-‘மம்மூத்’ என்ற இனத்தை சேர்ந்த ராட்சத யானை கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக படிப்படியாக அழிந்து விட்டன. தற்போது புதையுண்டு கிடக்கும் அவற்றின் எலும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
அதுபோன்று தோண்டி எடுக்கப்பட்ட ‘மம்மூத்’ யானையின் எலும்பு கூடு லண்டனில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அந்த எலும்பு கூடு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. 18 அடி உயரமும், 11.6 அடி நீளமும் கொண்ட இந்த எலும்பு கூடு 6 டன் எடையுள்ளது. இந்த எலும்பு கூடு கிழக்கு ஐரோப்பாவில் தோண்டி எடுக்கப்பட்டது. இது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தது என கணக்கிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி