சென்னை:-‘ஆம்பள’ படத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். சுந்தர் சி. டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தற்போது சண்டை காட்சியொன்று படமாகி வந்தது. இதற்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
ஸ்டன்ட் நடிகர்கள் குவிந்து இருந்தனர். வில்லன்களுடன் விஷால் மோதுவது போல் சண்டை காட்சியை எடுத்தனர். இதற்காக விஷால் உடம்பில் கயிறு கட்டப்பட்ட இருந்தது. தாவி குதித்து சண்டை போடுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டது. அவர் உயரத்தில் தொங்கிய போது திடீரென கயிறு அறுந்தது.
உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விஷால் கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடி பட்டது. உடம்பில் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டாக்டரிடம் விஷாலை அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி