பிரேசில்:-பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே. பிரேசிலை சேர்ந்த இவருக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த 13ம் தேதி சிறுநீரகப்பையில் கற்கள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேசன் நடந்தது.
அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பீலேக்கு திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரில் தொற்று கிருமிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி