இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டி ஒன்றின் போது பந்து தலையில் தாக்கியதில் கடந்த 27ம் தேதி மரணம் அடைந்தார். இது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா வீரர்கள் இந்த நேரத்தில் விளையாடும் மனநிலையில் இல்லாததால் போட்டியை ஒத்தி வைக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹியூக்ஸ் மரணத்தையொட்டி முதல் டெஸ்ட் போட்டியை தள்ளி வைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. வருகிற 4ம் தேதி தொடங்க இருந்த இந்த டெஸ்ட் ஒத்தி வைக்கப்பட்டது. முதல் டெஸ்ட் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹியூக்சின் இறுதிச் சடங்கு 3ம் தேதி நடைபெறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி