செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!

‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…!

‘லிங்கா’ வெளியீட்டு உரிமத்தை தட்டிச்சென்ற வேந்தர் மூவிஸ்…! post thumbnail image
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் லிங்கா படத்தை கோவை தவிர்த்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெளியிடுவதற்கான உரிமத்தை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.70 கோடி கொடுத்து இந்த உரிமத்தை வேந்தர் மூவிஸ் தட்டிச்சென்றது.

கோவையில் உள்ள பிரபல நகைக்கடை நிறுவனம், கோவை பகுதி தியேட்டர் உரிமத்தை மட்டும் கேட்டுவருகிறது. இதற்காக பெருந்தொகையை தரவும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரள உரிமத்திற்காக ரூ.10 கோடி வரை தருவதற்கு விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படம் ஒன்றை ஒரு மாநிலத்தில் வெளியிடுவதற்காக இவ்வளவு பெரிய தொகை தருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி