இருப்பினும், அந்தப் பெண் சளைக்காமல், தனது உறவினர் ரெயில்வே அமைச்சகத்தில் பணியாற்றியதாகவும், அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நண்பர் என்றும், இருவரும் சேர்ந்துதான், தங்கள் திருமணத்தை நிச்சயம் செய்ததாகவும் கூறினார். இருந்தாலும், இப்போது தன்னை சோனியா வீட்டிலோ, ராகுல் வீட்டிலோ உள்ளே அனுமதிக்க மறுப்பதாகவும் அப்பெண் குறைபட்டுக் கொண்டார்.
கடந்த 2012ம் ஆண்டு ராகுல் காந்தி தனக்கு அனுப்பியதாக, புத்தாண்டு வாழ்த்து அட்டை ஒன்றையும் அவர் காண்பித்தார். ஆனால் அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அந்த பெண், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுவதாகவும் மகளிர் போலீஸ் நிலைய பொறுப்பாளர் தேஜேஸ்வரி சிங் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி