ஆனபோதும், ஜிகர்தண்டா படத்தின் தோல்வி, லட்சுமிமேனனின் மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது. தற்போது கொம்பன் படத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், இந்த படத்தில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், கொம்பன் படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் குடும்ப பெண்கள் கண்கலங்க வைக்கும் வகையில், நடிக்கும் லட்சுமிமேனன், ஒரு காட்சியில் யூனிட்டே கலங்கிப்போகும் அளவுக்கு கிளிசரினே இல்லாமல் கதறி அழுதபடி நடித்துள்ளாராம்.
இந்த காட்சி கண்டிப்பாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அழ வைக்கும் என்கிறார்கள். இதுபற்றி லட்சுமிமேனன் கூறும்போது, நான் எந்த படத்திலும் நடிக்கிறோம் என்று நினைக்காமல் எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக மட்டுமே நினைத்து நடிக்கிறேன். அதனால்தான் என்னால் அந்த கதாபாத்திரமாக மாற முடிகிறது. அதற்கேற்ப டைரக்டர்களும் என்னை டம்மியாக யூஸ் பண்ணலாம். நானும் நடிக்க காட்சி வைக்கிறார்கள். அந்தவகையில் கொம்பன் என்னை பெரிய அளவில் பேச வைக்கும் படமாக அமையும் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி