மும்பை:-கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் பிரின்ஸ் பயன்படுத்தப்பட்டது. 10 வயதான இந்த நாய் போலீஸ் மோப்ப நாய் பிரிவை சேர்ந்தது. இதன் உதவியால் 45 குண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.
17 கையெறி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வளவு திறமை வாய்ந்த மோப்ப நாய் பிரின்ஸ் கடந்த ஆகஸ்டு மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றது. இந்த நாய் நேற்று மரணம் அடைந்தது.
லேப்ரேட்டர் இனத்தை சேர்ந்த இந்த நாய் 2006ம் ஆண்டு மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பிலும் மிகவும் உதவியாக இருந்தது. இருதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பால் மும்பை கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மோப்ப நாய் பிரின்ஸ் இறந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி