மேற்கண்ட மீனவர்களின் உயிரை காப்பாற்ற தாங்கள் எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டும் சந்தோஷமடையவில்லை. ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது என்று கூறியிருப்பவர் மோடிக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார். தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள்.
இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு, இதுபோன்ற தேவையற்ற தொந்தரவுகள் மேலும் பயத்தையும், அச்சுறுத்தலையும் தரும். இந்த சமூக மக்கள் இனி வருங்காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தி தர தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்.< இவ்வாறு விஜய், தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி