சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான மனிதர். ஆனால், இவர் மீது சமீப காலமாக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்களுக்கு கால்ஷிட் கொடுத்து விட்டு நீண்ட நாட்களாக நடிக்காமல், மற்ற படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதை அவர் கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்கள் என்றும் அறிக்கை விட்டார்.
ஆனால், முன்னணி பத்திரிக்கை ஒன்று தெரிவிக்கையில் விஜய் சேதுபதி முதன் முதலாக பெரிய பட்ஜெட் படமான ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் தயாரிக்க, இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இதன் காரணமாகவே இந்த படத்தை அவர் நிராகரித்து இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி