அதைத் தொடர்ந்து, அனுஷ்கா நடிப்பது போன்ற சரித்திர கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவருக்கு இப்போது கார்த்தி நடிக்கும் காஷ்மோரா என்ற படத்தில் ஒரு சரித்திர கதாபாத்திரம் கிடைத்துள்ளதாம். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த பிறகு மீண்டும் சரித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறாரர் நயன்தாரா.
அதனால், மற்ற படங்களில் கமிட்டாகும்போது கால்சீட்டை 5 நாள், 10 நாள் என்று துண்டு துண்டாக கொடுக்கும் நயன்தாரா, இந்த படத்திற்கு மொத்த கால்சீட்டையும் எண்ணிக்கொடுத்திருக்கிறாராம். காரணம், சரித்திர கதைகளில் நடிக்கும்போது அதன் பீல் மாறக்கூடாது. ஒரே நேரத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் கவனத்தை திருப்பினால் இந்த சரித்திர வேடம் கெட்டுப்போய் விடும் என்று சொல்லியே கால்சீட் கொடுத்தாராம் நயன்தாரா. அவரது இந்த ஈடுபாடு மேற்படி படக்குழுவை ஆச்சர்யப்படுத்தி உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி