வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, ‘மோஷன் கேப்ச்சர்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்’ திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
இந்த படத்தின் திரையீட்டின்போது, கோச்சடையானில் கதாநாயகனாக நடித்திருந்த ரஜினிகாந்த் பங்கேற்பார் என விழா ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட அலுவல்கள் நிமித்தமாக ரஜினிகாந்த் பெங்களூருக்கு சென்று விட்டதால், அவர் இந்த திரையீட்டில் பங்கேற்க இயலவில்லை என படம் ஆரம்பிப்பதற்கு சற்று நேரம் முன்னதாக அரசு உயரதிகாரி ஒருவர் அறிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி