அங்கே அதனை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள். ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பது அங்கு அந்த நடிகைக்கு கொடுக்கப்படும் சிறப்பு அங்கீகாரம. ஆனால் இங்கு அப்படியில்லை. மார்க்கெட் இழந்த நடிகைகள்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் மட்டும்தான் ஆடியிருக்கிறேன்.
என்னோட பெஸ்ட் பிரண்ட் மற்றும் குரு பிருந்தா மாஸ்டர் கேட்டுக்கிட்டதாலும் இன்னொரு பிரண்ட் லட்சுமிமேனன் பாடினதாலும் அந்த பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டேன். அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. நல்ல சம்பளத்துடன் வந்தது. ஆனால் ஒப்புக் கொள்ளவில்லை. எந்தப் படத்திலும் நான் வில்லியாக நடிக்கவில்லை. நெகட்டிவ் கேரக்டர்களில்தான் நடிக்கிறேன். அதற்கும் விமர்சனம் வந்தால் அதையும் விட்டுவிட்டு ஹீரோயினாகத்தான் நடிப்பேன். என்கிறார் இனியா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி