சென்னை:-இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இவர் இயக்குனர் மட்டுமின்றி நல்ல தயாரிப்பாளரும் கூட, காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற தரமான படங்களை தயாரித்தவர்.
தற்போது இவர் கப்பல் என்ற படத்தை வெளியிடவுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இன்னும் சில தினங்களில் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ள நிலையில், இந்த ஆல்பத்தை வெளியிட ரகுமான், விஜய், விக்ரம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி