சென்னை:-நடிகர் பால சரவணன் சின்னத்திரையில் இருந்து வந்த காமெடியன்தான். மதுரையைச் சேர்ந்த பால சரவணன் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பல குறும்படங்களிலும் நடித்தார். அதன் பிறகு ஈகோ என்ற படத்தின் மூலம் காமெடியன் ஆனார். குட்டிப்புலியும், பண்ணையாரும் பத்மினியும் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் முழு நீள காமெடியன். தற்போது வெளிவந்திருக்கும் திருடன் போலீஸ் படத்திற்கு பிறகு பால சரவணனின் சம்பளமும், இமேஜும் உயர்ந்திருக்கிறது. மற்ற காமெடி நடிகர்கள் ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டார்லிங், இடம் பொருள் ஏவல், வலியவன், நகர்வலம், ஆ, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், வரைபடம் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பால சரவணன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி