அப்படி கொலை செய்யும் அந்த நபர் அங்கே உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணின் மீது தனது பார்வையை திருப்புகிறார். அவர் தான் ரகசிய உளவாளி 009. சிறு வயதில் அனாதையாகி விடும் அப்பெண்ணை வெஸ்டர்ன் பிளாக் ராணுவ வீரர்கள் அழைத்து சென்று ரகசிய உளவாளியாக்குகின்றனர்.
வெஸ்டர்ன் பிளாக்கின் உளவாளியாகும் அப்பெண் தனது உடலையும், ஆயுதங்களையும் மூலதனமாக பயன்படுத்தி, ஈஸ்டர்ன் பிளாக் எதிரிகளை பற்றிய தகவல்களை உளவறிந்து கொள்வதுடன் அவர்களை சுட்டு கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஈஸ்டர்ன் பிளாக்கை சேர்ந்தவர்கள் அவளை நினைவுகளை மறக்க செய்து செயற்கை மனித உருவமாக மாற்றி விடுகின்றனர். அப்படி மாற்றிய பின் அவள் என்ன செய்தாள், மீண்டும் தனது மனித நினைவுகளை திரும்ப பெற்றாளா என்பதே மீதி கதை.
படத்தின் நாயகியாக நடித்துள்ள மேமி அபே மிகச்சிறப்பாக நடித்துள்ளார். செயற்கை மனித உருவமாக மாற்றப்பட்ட பின் உடல் முழுவதும் உளவுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக வரும் காட்சிகளில் சிறப்பாகவும், தனது மார்பகத்துடன் இணைக்கப்பட்ட 9 எம்.எம். மிஷின் கன் பயோ-புல்லட்டுகளை வெளிக்கொண்டு வந்து எதிரிகளை சுட்டுக்கொல்லும் காட்சிகளில் திறமையாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் மயூக்கோ இவாசா, மெனிஹிரோ கினோமோட்டோவும் ஆகியோரும் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காமிக் கதையை எடுத்துக்கொண்டு அதை தனது பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் கோய்ச்சி சகாமோட்டோ. இப்படத்தை பார்க்கையில் லேடி ஜாக்கி சான் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிப்பதை பார்த்தது போல் உள்ளது.
மொத்தத்தில் உளவு கன்னி 009 – அதிரடி…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி