நியூயார்க்:-வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
பனிப்புயலுக்கு நேற்றுவரை 5 பேர் பலியான நிலையில் இன்று பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் அருகே உள்ள பப்பல்லோ நகரில் 5 அடி உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. பப்பல்லோ நகரின் தெற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் பனிப்புயலின் கடும் தாக்கம் காரணமாகவே 10 பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்று காலி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாகாண கவர்னரான ஆண்ட்ரூ எம். குவோமோ எமர்ஜென்சி பிறப்பித்து உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி