வாஷிங்டன்:-அமெரிக்காவில் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக குடியேறி பணி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அங்கு இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 1 கோடியே 10 லட்சம் பேர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள். எச்–1 பி விசா பெற்றவர்கள்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. அதை தவிர்க்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி குடியுரிமை வழங்கி பாதுகாக்க சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அதன்படி ஆவணமின்றி குடியேறியுள்ள 1 கோடியே 10 லட்சம் பேரில் 50 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஒபாமா நேற்று மாலை டெலிவிஷனில் அறிவித்தார். அப்போது அவர் தான் எடுத்த 3 முக்கிய நடவடிக்கைகளை விவரித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி