சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு 26 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 17 வரை நடத்தப்பட்ட வாக்கெடுப்பு காலத்தில் ஜான்சன் 29 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவரது சராசரி 15.23 ஆகும்.
கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து ஏழு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். 16 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 21 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதை சக நாட்டவரான ரிக் பாண்டிங்கிற்கு பின் ஜான்சன் தற்போது இரண்டாவது முறையாக பெறுகிறார். முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டும் ஜான்சன் இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி