அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில், உலக வர்த்தக அமைப்பில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து நேற்று பிரதமர் மோடி உரையாற்றியபோது சில யோசனைகளை தெரிவித்தார். இந்த யோசனைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
பிரதமர் மோடியுடனான விரிவான ஆலோசனைக்கு பின்னர் இவ்விவகாரத்திற்கு புதிய பாதையை கண்டுபிடித்த அவரது தலைமைப் பண்பை ஒபாமா மிகவும் ஆதரித்துள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் ஜோஷ் எர்னெஸ்ட் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நேற்றைய சந்திப்புக்கு பின்னர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா, அவர் ஒரு ’செயல்வீரர்’ (மேன் ஆப் ஆக்ஷன்) என்று குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி