சென்னை:-நடிகை ரம்யா தமிழில் குத்து, கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். ரம்யா இரு வருடங்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இடைதேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார். அதன் பிறகு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால் விரக்தி ஏற்பட்டது. கட்சிக்குள் தனக்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு ரம்யாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. வீட்டுக்கு ரம்யாவை தேடிச் சென்ற பலர் அவர் இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
பலமாதங்கள் அவரை காணாததால் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவின.இதையடுத்து ரம்யா திடீரென வெளிவந்துள்ளார். தன்னைப் பற்றி வெளியான செய்திகள் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
இது குறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:– என்னைப்பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் மாயமாக வில்லை. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி