லண்டன்:-இங்கிலாந்தில் 1980ம் ஆண்டு பிரபல பாப் பாடகராக இருந்தவர் மிக் ஹாக்னாஸ். தற்போது அவருக்கு 54 வயது ஆகிறது. இவர் புகழின் உச்ச நிலையில் இருந்த காலத்தில் பெண்கள் அவர் மீது மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தனர். அதை பயன்படுத்தி ஏராளமான பெண்களுடன் அவர் உறவு வைத்துக்கொண்டார். தனது செக்ஸ் வாழ்க்கை தொடர்பாக இப்போது பகிரங்கமாக தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
நான் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் ஏராளமான பெண்கள் என்னை தேடிவந்தனர். அவர்களுடன் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டேன். தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்வேன்.
நான் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளேன். ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜெட்டா ஜோன்ஸ், பிரபல மாடல் அழகி ஹெலனா கிறிஸ்டென்சன் ஆகியோரும் என்னுடன் சுற்றி திரிந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மிக் ஹாக்னாஸ் 2010–ம் ஆண்டு கேப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுடன் கணவர் போல வாழ்ந்து வந்தார். இதனால் 2007–ம் ஆண்டே அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி