சென்னை:-‘கோச்சடையான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சௌந்தர்யா. தற்போது இவர் இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி ரஜினி நடித்திருக்கும் ‘லிங்கா’ படத்தின் அனைத்து ரைட்ஸையும் வாங்கிவிட்டார்.
ஈராஸ் அளித்துள்ள தகவலின் படி நவம்பர் 16ம் தேதி அன்று ‘லிங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி