செய்திகள் விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய இரண்டும் கூட்டாளிகள் – டான் பிரவுன்!…

விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய இரண்டும் கூட்டாளிகள் – டான் பிரவுன்!…

விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய இரண்டும் கூட்டாளிகள் – டான் பிரவுன்!… post thumbnail image
டெல்லி:-குறியாக்கவியல், ரகசிய மற்றும் சதித்திட்ட கோட்பாடுகள் தொடர்பான நாவல்கள் எழுதுவதில் வல்லவரான டான் பிரவுன், பெங்குயின் பதிப்பகத்தின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில் ‘குறியீடுகள், அறிவியல் மற்றும் மதம்’ என்ற தலைப்பில் பேச டெல்லியில் உள்ள சிரி கோட்டை அரங்கிற்கு வந்திருந்தார். அரங்கிற்குள் நுழைந்த டான் பிரவுனிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அரங்கில் கூடியிருந்த மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரவுன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

தனது 5-வது வயதில் முதல் கதையை தன் தாயிடம் சொன்னதாகவும், அதனை அவரது தாய் எழுதி ஒரே ஒரு புத்தகம் மட்டும் அச்சிட்டதாகவும் தெரிவித்த பிரவுன், அந்த புத்தகத்தின் பெயர்,’தி ஜிராப், தி பிக்ஸ் அண்ட் தி பேண்ட்ஸ் ஆன் பையர்’ (The giraffe, the pigs and the pants on fire ) எனவும், அது ஒரு திகில் கதையெனவும் குறிப்பிட்டார். விரிவுரையின் போது, ‘அறிவியல் மற்றும் மதம் ஆகிய இரண்டும் கூட்டாளிகள்’ எனக் குறிப்பிட்ட பிரவுன் அவை இரண்டும் ஒரே கதையை இரு வேறு மொழிகளில் சொல்வது போல உள்ளது எனவும் தெரிவித்தார்.

இது குறித்து டான் பிரவுன் பேசிய போது, உலக மதங்கள் அனைத்தும் ஒரே ஒரு மனித உண்மையை அடிப்படையாக கொண்டுள்ளன. உருவாக்குதல் அழித்தலை விட மேலானது. அன்பு செலுத்துவது வெறுப்பை விட சிறப்பானது போன்ற கருத்துக்கள் நேர்மறையான எண்ணங்களை பரப்புகின்றன எனத் தெரிவித்தார்.’தி டாவின்சி கோட்’, ’ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ்’, ’தி லாஸ்ட் சிம்பல்’, ‘ இன்பர்னோ’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ள டான் பிரவுனின் படைப்புகள் 52 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி