செய்திகள்,திரையுலகம் நடிகை பிரியாவை மணந்தார் இயக்குனர் அட்லி!…

நடிகை பிரியாவை மணந்தார் இயக்குனர் அட்லி!…

நடிகை பிரியாவை மணந்தார் இயக்குனர் அட்லி!… post thumbnail image
சென்னை:-ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் இயக்குனர் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்து உள்ளார்.

அட்லி–பிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர். அட்லி–பிரியா திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சங்கர் தாலியை ஆசீர்வதித்து கொடுக்க அட்லி மணப்பெண் பிரியா கழுத்தில் கட்டினார்.திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி