ஐதராபாத்:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியின் போது அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்துக்கு வந்து கோலியின் ஆட்டத்தை ரசித்து அவரை உற்சாகப்படுத்தினார்.
கோலி அரை சதம் அடித்ததோடு 6 ஆயிரம் ரன்னை அதிவேகமாக கடந்து உலக சாதனை படைத்தார். அப்போது அவர் காதலியை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். மேலும் ஹெல்மட்டை கழற்றி அதற்கு முத்தம் கொடுத்தார். இது காதலிக்கு கொடுத்த முத்தமாக கருதப்படுகிறது. இதற்கு அனுஷ்காவும் மனப்பூர்வமாக பதிலை கொடுப்பது டெலிவிசன் ஒளிபரப்பில் தெரிந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி