மறுநாள் இரவும் இதே போல் சத்தம் கேட்கிறது. இதை நேத்ரா வினோத்திடம் சொல்ல, அவனும் அந்த சத்தத்தை உணர்கிறார். இந்த சத்தம் கீழே இருந்து வருகிறது என்று தெரிந்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கு பிப்ரவரி 31 என்று ஒரு காலண்டரை பார்க்கிறார்கள். பிப்ரவரி மாதத்தில் அந்த நாளே இல்லாததால் அப்படி ஒரு காலண்டரை பார்த்ததும் இருவரும் அதிர்ந்து போகிறார்கள். இதனால் நேத்ரா பயந்து இந்த வீட்டை விட்டு செல்லலாம் என்று கூறுகிறார். அதற்கு வினோத், நேத்ராவை சமாதானம் செய்து அந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று கூறுகிறார். மறுநாள் வினோத்தின் நண்பரான சந்துருவும் அவரது காதலியான அனிதாவும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்காக (லிவ்விங் டுகெதர்) இந்த பங்களாவிற்கு வருகிறார்கள். அன்று இரவும் ஒரு சத்தம் கேட்க, நேத்ரா சத்தம் கேட்கும் இடத்திற்குச் செல்கிறார். அங்கு யாரோ பயன்படுத்தி தூக்கி எறிந்த இன்ஹேலர் இருப்பதை காண்கிறாள். பயந்துபோன இவர் அந்த இன்ஹேலரை தொடுகிறார். அதை தொட்டவுடன் அவருக்கு மூச்சுத் திண்றல் ஏற்படுகிறது.
அன்று இரவு அனிதாவிற்கும் வினோத்திற்கும் தொடர்பு ஏற்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருக்கும் வேளையில் நேத்ரா இருவரையும் கொல்ல நினைக்கிறார். அதன்பிறகு மயங்கி விழுகிறார். நினைவு திரும்பி பார்க்கும் போது இரவு நடந்தது எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக் கொள்கிறார். இதனால் வினோத்தும், அனிதாவும் பயப்படுகிறார்கள். வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக எண்ணி அனிதா ஒரு சாமியாரை சென்று கேட்கிறார். அதற்கு அவர் வீட்டில் ஒரு கொடூரமான ஆவி ஒன்று இருப்பதாகவும் அது நேத்ரா மீது இருப்பதாகவும் இன்று இரவு உங்களில் ஒருவரை கொல்ல இருப்பதாகவும் கூறுகிறார்.
இறுதியில் நேத்ரா உடலில் ஊடுருவியிருக்கும் ஆவி யார்? எதற்காக ஆவி கொலை செய்ய துடிக்கிறது? வீட்டில் இருப்பவர்கள் ஆவியிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை. படத்தில் வினோத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் நடிப்புத் திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நேத்ராவாக நடித்திருக்கும் நிரஞ்சனா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக ஆவி இவர் மேல் புகுந்தவுடன் பெரிய கண்ணை வைத்து அனைவரையும் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். மேலும் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஒரே பங்களாவை மையமாக வைத்து அதில் பேயை மைய கதையாக வைத்து குறைந்த கதாபாத்திரங்களை வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். அலிமிர்ஸாவின் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். சீனுவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகளை தெளிவாக காண்பித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘அம்சவல்லி’ திகில்………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி