லண்டன்:-லண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற அந்த பாட்டி தனது கணவர் இறந்தவுடன் இந்த முதியோர் இல்லத்துக்கு வந்தார்.
அங்கு இருந்த அபனாசில் ஹரின் என்பவரை சந்தித்தார். அந்த மகிழ்ச்சியான ஜோடி 11 வருடங்களாக அந்த இல்லத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்களது திருமணத்தில் இல்லத்தில் தங்கியிருக்கும் மற்றவர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி