அதே சமயம், ரஜினிக்கு அடுத்து யார் என்ற புதிய சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவானது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று செய்திகள் வெளிவர ரஜினிகாந்த் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கொஞ்ச நாட்களாக அடங்கியிருந்த அந்த சர்ச்சை நேற்று முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த கத்தி படம் வெளியான 12 நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததை அந்தப் படத்தின் இயக்குனர் முருகதாஸ் வெளியிட, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் மன்னன் என அவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஒரு பக்கம் 12 நாட்களுக்குள் அவ்வளவு வசூலை அள்ள வாய்ப்பேயில்லை என்றும் சொல்கிறார்கள்.
கடந்த வார இறுதியிலிருந்தே படத்திற்கான ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டதாகவும் திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் 10 நாட்களுக்குள் படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது என்றும் கணக்கு போட்டுச் சொல்கிறார்கள். இப்போது அஜித் அவருடைய என்னை அறிந்தால் படம் மூலம் அவருடைய பாக்ஸ்-ஆபீஸ் நிலவரத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விஜய் படமே 12 நாளில் 100 கோடி வசூலித்தது என்றால் எங்கள் ரஜினியின் லிங்கா படம் 12 நாளில் 200 கோடியை வசூலிக்கும் என்று ரஜினியின் ரசிகர்களும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி