செய்திகள்,திரையுலகம் மேடையில் மயங்கி சாய்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்!…

மேடையில் மயங்கி சாய்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்!…

மேடையில் மயங்கி சாய்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்!… post thumbnail image
சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், அசல் என ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார். மேலும், வெளிநாடுகளிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பரத்வாஜ், வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்.

அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரான்சில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தாராம். அப்போது, இவரை மேடைக்கு அழைத்தபோது இருக்கையில் இருந்து எழுந்து சென்றிருக்கிறார். ஆனால், அந்த நேரம் பார்த்து மேடையில் புகை மண்டலத்தை எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் அந்த புகையை சுவாசித்த பரத்வாஜ்க்கு மயக்கம் வந்து விட்டதாம். மூச்சு விட முடியாமல் தடுமாறினாராம்.

அதனால் அப்படியே அமர்ந்து விட்டாராம். அதையடுத்து புகை இல்லாத இடத்துக்கு அவரை அழைத்து சென்று சிறிது நேரம உட்கார வைத்து மயக்கம் தெளிந்த பிறகு மேடைக்கு கூட்டி வந்தார்களாம். இந்த எதிர்பாராத சம்பவத்தினால் பலத்த அதிர்ச்சியடைந்த பரத்வாஜ், பின்னர் ஓரளவு மயக்கம் தெளிந்ததும், மேடையில் தோன்றி மைக் பிடித்து பேசினாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி