மக்களிடம் போய் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்க வேண்டாம் என்று சொன்னால் அது முட்டாள்தனம். அதை சொல்லவும் நான் விரும்பவில்லை. இந்த திருட்டு வி.சி.டி. எங்கு இருந்து வருகிறது என்று கண்டுபிடித்துவிட்டோம். அதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த வேலைகள் நடந்து வருகிறது. மற்ற நடிகர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன்.விஷாலுடைய சொந்தப்படம் சொந்த பேனரில் வர ஆரம்பித்த பின்னர்தான் அவர் திருட்டு வி.சி.டி.யை தடுக்க போராடுகிறார் என்று கருத்து நிலவுகிறது. நடிகர்களாக இருக்கும் போது ஒரு படம் வெளியானதும் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று மக்களிடம் சொன்னதோடு எங்களது கடமை முடிந்தது என்று நினைத்தோம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக பார்க்கும்போது திருட்டு வி.சி.டி.யை தடுக்கும் கடமை அதிகரித்துவிட்டது. நாங்கள் ஒரு படம் எடுக்க எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். படத்தின் முதல் நாள் போஸ்டரில் இருந்து 10–வது நாள் போஸ்டர் வரை டிசைன் செய்து ரிலீஸ் பண்ண நினைக்கிறோம். ஆனால் படம் ரிலீசான முதல் நாளே வி.சி.டி.யாகும்போது என்னால் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்? கோபப்படாமல் இருந்தால் நான் ஆம்பளையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேபிள் டி.வி. (லோக்கல்)களில் எல்லா புது படங்களையும் ரிலீசாகி 10 நாளுக்குள்ளேயே போடுகிறார்கள். இதை பார்க்கும் போது கோபம் வருகிறது. தமிழ் சினிமா எனக்குதாய். எனவே எனக்கு கோபம் வந்து நான் தட்டி கேட்கிறேன்.
திருட்டு வி.சி.டி.யை பிடிக்கிற இடங்களில் எல்லாம் வேலை பார்க்கிறவர்கள் மட்டும் தான் சிக்குகிறார்கள். உரிமையாளர்கள் தப்பி விடுகிறார்கள். முதல் தடவை ஒரு கேபிள் டி.வி.யில் பிடிக்கும் போது அங்கு இருந்த பையன்தான் சிக்கினார். உரிமையாளர் எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த பையனை பார்க்கும் போது எனக்கே பாவமாகத்தான் இருந்தது. அந்த பையன் ஒரு கல்லூரி மாணவர். அவருக்கு அது தப்பு என்று தெரியுது. தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்.திருட்டு வி.சி.டி. ஒழிப்பில் தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது. புகார் கொடுத்த 5–வது நிமிடம் சம்பவ இடத்துக்கு வந்து கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்களோ அதைவிட அதிகமாக திருட்டு வி.சி.டி.க்காரர்கள் சம்பாதிக்கிறார்கள். புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் கூறுகிறார்கள். அதை நான் மட்டும் பண்ண வேண்டும் என்று அல்ல. எதிர்க்கும் யாராக இருந்தாலும் புகார் செய்யலாம். போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.திருட்டு வி.சி.டி. ஒழிப்பு பற்றி வருகிற 16ம் தேதி நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கூடி பேசி முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க இயக்குனர் சேரனின் சினிமா டு ஹோம் முயற்சி பாராட்டுக்குரியது. இது அவரது தனிப்பட்ட முயற்சி. ஆனால் இதற்கு தமிழ் சினிமா உலகம் கூட்டு முயற்சி செய்தால் பின்வரும் காலங்களில் வெற்றியடையலாம்.
இவ்வாறு விஷால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி