செய்திகள்,திரையுலகம் ஜோதிகா பயந்த விவாகரத்து விஷயம் – நயன்தாரா நுழைந்தாரா உள்ளே!…

ஜோதிகா பயந்த விவாகரத்து விஷயம் – நயன்தாரா நுழைந்தாரா உள்ளே!…

ஜோதிகா பயந்த விவாகரத்து விஷயம் – நயன்தாரா நுழைந்தாரா உள்ளே!… post thumbnail image
சென்னை:-பல இயக்குனர்கள் ஜோதிகாவை மீண்டும் சினிமாவில் இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் எதுக்கும் பிடி கொடுக்காத நிலையில் சமீபத்தில் தன் கணவரின் சிபாரிசில் மலையாளம் படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற தமிழ் பதிப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதைப்படி திருமணமாகி ஒற்றுமையாக வாழ்ந்த கணவன் மனைவி திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போவது போன்ற கதையம்சம் இருப்பதால் ஜோதிகா இந்த படத்தில் நடிக்க செண்டிமெண்டாக தயங்கி வருவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் நடித்த பின்னர்தான் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த மஞ்சுவாரியர் – திலீப் ஜோடி திடீரென பிரிந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இதுவும் ஜோதிகாவை உறுத்தியுள்ளதால், சூர்யாவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோதிகாவுக்கு திடீர் தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே சமயம் இந்த படத்தில் தான் ஏற்க வேண்டிய கதபார்த்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் யோசனைக்கு வந்து உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி