செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!…

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!…

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே. சுரேஷ் இந்த புகாரை அளித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் வசந்த குமாரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் இதற்காக அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது என்றும் தற்போது படத்தில் நடிக்க மறுக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த புகார் நடிகர் சங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விரு சங்கங்களும் விஜய் சேதுபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றன. விஜய்சேதுபதி தற்போது பிசியான நடிகராக உள்ளார். வன்மம், ஆரஞ்சு மிட்டாய், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரவடிதான் படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பதால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி