சென்னை:-லிங்கா படத்தின் டீஸர் கடந்த 1ம் தேதி 4 மணியளவில் வெளியாகியிருந்தது. முதலில் வெளியிடப்பட்ட டீஸர் சில நிமிடங்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 1 லட்சம் பார்வையாளர்களையும், 3500 லைக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால், அது நீக்கப்பட்டு மற்றொரு புதிய டீஸர் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த டீஸர் வெளியான 40 மணி நேரங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. அதோடு 11 ஆயிரம் பேர் இந்த டீஸரை லைக் செய்துள்ளனர்.
ஆனால் கோச்சடையான் டிரைலர் சாதனையை ஒப்பிடுகையில் லிங்கா டீஸரைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி