சரி அப்படி என்னை தெரியும் என்று சொல்லும் அவருக்கு என்னுடைய தொலைபேசி எண் கூட அவரிடம் கிடையாதா? பண பறிப்புக்காகவே இது போல் சம்பவங்கள் நடைபெறுகிறது. துப்பாக்கி படம் எடுத்த சமயம் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை எடுத்த ஒரு தயாரிப்பாளர் எடுத்தார், பிறகு எங்களிடம் படத்தின் தலைப்பில் பிரச்சனை செய்து கடைசியில் 19 லட்சம் கொடுத்த பிறகு சமாதானத்துக்கு வந்தனர்.தற்போது இதுபோல் எல்லாருக்கும் காசு கொடுத்து ஊக்குவித்தால் படம் எடுப்பவர்கள் எங்கே போவார்கள. இப்பிரச்சனை வந்ததுமே நான் தயாரிப்பாளரிடம் ஒரு விஷயத்தை உறுதியாக தெரிவித்தேன், எக்காரணம் கொண்டும் இது போல் பிரச்சனை செய்யும் ஆட்களுக்கு ஒரு பைசா தர கூடாது, அப்படி இல்லை என்றால் நான் விலகி கொள்கிறேன் என்று கூறினேன்.
என் பேச்சை கேட்ட தயாரிப்பு நிறுவனம் ஒரு பைசா கூட கோபிக்கு தற்போது வரை தரவில்லை. இதனாலே இந்த பிரச்சனை இவ்ளோ தூரம் வருகிறது. இப்படம் ஒரு சமுக அக்கறை கொண்ட கதை, நான் பார்த்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதினேன். இதை எப்படி அவர் உரிமை கொண்டாட முடியும். அது மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் இப்பிரச்சனை பற்றி புகார் உள்ளது, இதனாலே தற்போது வரை நான் மௌனமாக இருந்தேன். கதை திருடும் அளவுக்கு நான் மூளை இல்லாதவன் இல்லை என்று ஆவேசப்பட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி