சென்னை:-குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ல்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டார். நடிக்க வாய்ப்பு குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், என்னைப்போல பல நடிகைகள் இப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியது இந்தியா முழுவதும் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்வேதா பாசு ஐதராபாத்தில் உள்ள மீட்பு இல்லத்தில் 6 மாதங்கள் தங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஸ்வேதாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் கீழ்க்கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் செசன்சு கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.
மீட்பு இல்லத்தில் அவர் தங்க வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே அவரை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். மீட்பு இல்லம் அவரை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி